KathaiKathaiyaam

Friday, February 29, 2008

<<>>உணவு மழைத் தீவு! -3.<<>>(சிறுவர் தொடர் கதை )




மக்கள் தங்கள் தேவைக்கு மேல் கொஞ்சம் கூடுதலா
எடுத்து வந்து... இல்லை, இல்லை பாத்திரங்களில் பிடித்து
வந்து வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள்.
எதிர்பாராதவிதமாக புயல், சூறாவளி அடித்தால்
மக்களால் வீட்டுக்கு வெளியே வந்து உணவுப் பதார்த்தங்களை
சேகரிக்க முடியாமல் போகும்.

அதனால்ஒருவேளை அல்லது இரண்டு வேளை உணவு எப்போதும்
எல்லார் வீடுகளிலும் தயாரா இருந்து கொண்டே இருக்கும்!
இந்த நகரத்துல ஒரு உணவுவிடுதிகூட கிடையாது. அதற்கான அவசியமும் இல்லையல்லவா? அதனால்தான்
அவர்கள் அப்படி சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள், என்றார் தாத்தா.
உடனே ரவிக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள்ளாம் வாங்குறதுக்குக் கூட கடைகள்
கிடையாதா? தாத்தா என்று கேட்டான்.
" தாத்தா சொல்லுவாங்கடா, அதுக்குள்ள முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக்கிட்டு கேக்காதே " என்றாள் நிகிலா.
" சரி... சரி சின்னப் பையந்தானேம்மா, " என்ற தாத்தா, " மிட்டாய், பிஸ்கெட்டுகள், ஐஸ்க்ரீம், சாக்லேட், கேக்..இப்புடி
எல்லாத்துக்கும் வானமே கடை! அதுக்கும் வானம் ஒரு நேரம் ஒதுக்கி " சிறுவர் நேரம்" என்ற நேரத்தில் வானம்
பொழியும்! அந்த நேரத்தில் சிறுவர்கள் பாடு ஒரே கொண்டாட்டம்தான்!
ஆந்த ஊரில் முனிசிபாலிடிக்காரங்களுக்குத்தான் இராப்பகலா வேலை இருக்கும்.
வானம் உணவு வகைகளை சப்ளை செய்துட்டு கொஞ்ச நேரத்துல மழை பெய்து இயற்கையாவே சுத்தப்படுத்தினாலும்
கூட ஆங்காங்கே இட்லி, தோசை, சிக்கன், மட்டன் அப்டீன்னு கீழ கிடக்கும். அதை எல்லாம் சுத்தப்படுத்துறதுக்குரிய
வாகனங்களைக் கொண்டுவந்து சுத்தப்படுத்தி, அவற்றை எல்லாம் அந்த வாகனத்தின் பின்னால் வரும் லாரியில் எடுத்து
நகரை ஒட்டிய கடலில் கொண்டுபோய் மீன்களுக்கு உணவாகப் போட்டு விடுவார்கள். ஆந்த வேலையைச் செய்ய
வீட்டுக்கு ஒருவர் தினமும் போயாக வேண்டும்.
காலையிலிருந்து இரவு பத்து மணி வரை நகர் துப்புறவுப் பணிக்கு என்று ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
சில சமயங்களில் உணவு மழை புயல் வீசி அதிகமாக பொழிந்து தள்ளி விட்டால் சமயத்தில் ஹெலிகாப்டர் உதவி
கொண்டு எல்லாம் துப்புறவுப் பணி மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
துப்புறவுப் பணி செய்யும்போது சில சமயங்களில் காற்று நூறு மைல் வேகத்தில் அடிக்கும். அப்போதெல்லாம் சுத்தப்
படுத்துகிற வேலை மிகவும் கஷ்ட்டமாக இருக்கும். வானிலைக்கு ஏற்றவாறு அவர்கள் உடை அணிந்திருக்கவேண்டும்.
ஒரு முறை இரவு உணவுக்கு மட்டன், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, ஆஃப் பாயில், ஆம்லெட் என்று மாறி,
மாறிக் கொட்டித் தீர்த்துவிட்டது. ஆனால் பருவ நிலைக் கோளாறால் விடியவிடியப் பெய்து தெருவெங்கும் ஒரு ஆள்
உயரத்துக்கு நிறைந்து காணப்பட்டது. பெரியபெரிய கிரேன்களைக் கொண்டு வாரக் கணக்கில் சுத்தம் பண்ண
வேண்டியிருந்ததால் முட்டை, மட்டன், சிக்கன் நாற்றம் குடலைப் புரட்ட ஆரம்பித்து விட்டது. ஆது போன்ற எதிர்
பாரத சமயங்களில் இந்த நகரத்து மக்களுக்கு அந்த வாழ்க்கை வெறுத்துப் போகும். அப்படி ஒரேயடியாக
வெறுக்க வேண்டிய சூழ் நிலையும் ஒரு நாள் வந்தது!
இன்னும் பொழியும்.....!


0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது