KathaiKathaiyaam

Wednesday, April 16, 2008

<<>>உணவு மழைத் தீவு! -7-<<>>



சிறுவர்கள், சிறுமிகள் சாலைக்கு வந்து வேடிக்கைபார்க்கத் துவங்கினர். .அவ‌ர்க‌ளுக்கு ப‌ள்ளி வார‌விடுமுறை. அத‌னால் சிறார்க‌ள்கூட்ட‌ம்கூட்ட‌மாக‌ ந‌ண்ப‌ர்க‌ளோடு அர‌ட்டைய‌டித்துக்கொண்டிருந்த‌ன‌ர்.தங்களுக்குத் தெரிந்த விளையாட்டுகலில் ஈடுபட்டனர்.இர‌வெல்லாம் பாதாள‌ அறையில் ப‌ய‌ந்துகொண்டே இருந்த‌து குறித்துப் பேசின‌ர்

பெரியவர்கள் வீட்டுக் கூரைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.உட‌ன‌டியாக‌ச் செய்யாவிட்டால் அடுத்த‌நேர‌ம் வானம் பொழிவ‌தெல்லாம்வீட்டுக்குள் அல்ல‌வா வ‌ந்து விழும்! அத‌னால் துரித‌மாக‌ வேலைக‌ளைச்செய்துகொண்டிருந்த‌ன‌ர். "என்ன வாழ்க்கை? எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ‌வேண்டியிருக்கிறதே" என்று கவலைப்பட்டனர்.வ‌ருட‌த்தில் ஓரிருமுறை இப்ப‌டியான‌ "இடியாப்ப‌" சூறாவ‌ளி ஏற்ப‌டும்போதுஉண‌வும‌ழைத்தீவில் இதுபோன்ற‌ சேத‌ங்க‌ள் நிக‌ழ்ந்துவிடுகிற‌து.
திடீரென்று சிறார்கள் ஓவென்று சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்கு வெளியேஓடிவந்தனர். அவர்கள் ஓடிவந்ததற்கு காரணம் "வானிலை அறிக்கை"தான்.இன்னும் சிறிது நேரத்தில் போதுமான இடைவெளியில் சிறார்களுக்கான‌கோன் ஐஸ் கிரீம், ஐஸ் கிரீம் கேக், ரெய்ன்போ கட்லட், ஸ்கை குல்ஃபிபோன்றவற்றோடு ஜூஸ் வகைகள், ஃப்ரூட் பஞ்ச் அங்குமிங்குமாகப் பொழியக்கூடும்என்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டுத்தான் அப்படி சத்தம் போட்டு ஓடிவந்தனர்.


இதற்குள் வீட்டுக்கூரைகளைச் செப்பனிட்டு முடித்து பெரியவர்கள் அலுப்போடு வீட்டுக்குள் செல்லவும் வானம் சிறார்களுக்கான சிறப்புச் சுவையுணவுகள் பொழியத்துவங்க சிறார்கள் பாடு கொண்டாட்டம். சிதறிவிழுந்ததை ருசி பார்க்க வளர்ப்புநாய்களும் பூனைகளும் கூட சிறார்களோடு போட்டிபோட்டு ஓடிக்கொண்டிருந்தன.ஐஸ்க்ரீம் சிறார்களுக்கு மட்டுமல்ல; பெரியவர்களும் இந்த ருசிபார்க்கும் படலத்தில் சேர்ந்துகொண்டனர்.
சிறார்கள் தங்களுக்குத் தேவையான உண் பொருள்களைச் சேகரித்ததும்தம் நண்பர்களோடு பேசிச்சிரித்து உள்ளே
தள்ளிக்கொண்டிருந்தனர்.
சிறார்களின் முகங்கள் சாப்பிட்டதற்கு
அடையாளமாக சாட்சி சொல்லிக்கொண்டிருந்தது.
அவர்களின் ஆட்டம் பாட்டம் எல்லாம் அரைமணிநேரத்தில் முடிந்து போனது.
வீட்டு வேலை செய்து அலுத்துப்போயிருந்தவர்கள் அந்தத் தீவிலிருந்த ஒரே ஒருஉணவகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
வான‌ம் பொழியும்போது உணவகம் எதற்கு என்கிறீர்களா? சில நேரங்களில் சிலர்வானம் பொழிவதை தங்களுக்காகச் சேகரம் செய்ய இயலாமல் போய்விடும்போதுஅவர்கள் உணவகம் தேடிப் போவது வழக்கம். உணவகத்தில் வானத்திலிருந்து பொழிந்ததை எடுத்து வைத்து வாடிக்கையாக வருவோருக்கு வழங்குவார்கள்.

வானம் சிலசமயம் சாப்பிட இயலாதபடி பொழிந்து தள்ளிவிடும்போது வீடுகளில் சேமித்துவைத்துக்கொள்ளாதவர்கள் உணவகம் வருவது உண்டு. இங்கு சாப்பிடுவதற்கு கட்டணம் ஏதும் இல்லை. அங்கு பரிமாறுபவர்களுக்கு விரும்பிய காசை/ தொகையை‌கொடுத்துவிட்டு வந்துவிடலாம். இப்படி எல்லா இடத்திலும் இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறீர்களா? தம்பி தங்கைகளே!

உணவுமழைத்தீவு மக்கள் கொடுத்துவைத்தவர்கள் என்கிறீர்களா?அப்போது இரவு உணவுக்கான வானிலை அறிவிப்பு தொடங்கியது.

இன்னும் பொழியும்...

Wednesday, April 09, 2008

<<>>உணவு மழைத் தீவு! -6-<<>>(சிறுவர் தொடர் கதை )


உணவுமழைத்தீவில் பொழுது
புலர்ந்தபோது
பலருக்கு அது
சுகப்பொழுதாக இல்லை.


தீவில் பெரும்பாலான வீடுகள் பலத்த சேதமடைந்திருந்தது. தீவு மக்கள் அனைவரும் பாதாள அறைகளில் இருந்ததால் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. வீடுகளுக்கு வெளியே வந்து பார்த்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. வட்டவட்டமாய் இரண்டடி உயரத்தில் எங்கும் வெள்ளையாகக் கிடந்தது. அதேபோல பறக்கும் தட்டு போல இளஞ்சிவப்பாகவும் கரிய நிறத்திலும் எங்கும் சிதறிக்கிடந்தது. அதே நேரத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் சொல்லத் துவங்கிவிட்டதால் பாதாள அறையில் செய்தியைக் கேட்ட போதுதான் வெளியே கிடந்தது என்ன என்பதை எல்லோரும் அறிந்தனர்.

நள்ளிரவுக்கு மேல் வானவெளியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தீவில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. வெள்ளை நிறத்தில் இராட்சச இட்டிலிகளும், பறக்கும் தட்டுபோல பிரம்மாண்ட தடிப்பாக தோசைகளும் பொழிந்தது. இராட்சச இட்டிலிகள் மணிக்கு 16மைல் வேகத்தில் வந்து தீவுகளில் விழுந்தது. இதனால் தீவில் பல வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.
சேத மதிப்பு பல லட்சம் சாகரம் (நாம் ரூபாய் என்பது போல இந்தத் தீவில் சாகரம் என்பார்கள்) இருக்கும் என்று கருதப்படுகிறது. யாரும் இந்த இராட்சச‌உணவுப்பண்டங்களைத் தொடவேண்டாம். அதில் விசக்கிருமிகள் இருக்கக்கூடுமென்று தீவு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நகர அதிகாரிகள் தக்க இயந்திரங்களைக்கொண்டு அப்புறப்படுத்துவார்கள். அதுவரை யாரும் தெருக்களில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். அடுத்த 30 நிமிடத்தில்மீண்டும் செய்திகள் வாசிக்கப்படும்" என்று அறிவிப்பாளர் சொல்லி மறைந்தார். சிறிது நேரத்தில் துப்புறவு இயந்திரங்கள் சாலைகளில் செல்லும் சத்தம் கேட்டது. கவச உடையணிந்த பணியாளர்கள் அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.




பிரம்மாண்ட தூக்கு கருவிகள்,


தள்ளு கருவிகள், அள்ளும் கருவிகள்




சத்தம் காதைச் செவிடாக்கிக்கொண்டிருந்தது.







சிலமணிநேரங்களில் தண்ணீர் லாரிகள்
தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கழுவிக்கொண்டு போனது.
பின்னாலேயே ஈரத்தை உலரவைக்கும் காற்றூதி வாகனம் செல்ல சிலமணிநேரங்களில் அந்தத் தீவு தூய்மையாகிவிட்டது.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது