KathaiKathaiyaam

Wednesday, December 13, 2006

<<>>வறுமையிலும் நேர்மை...!<<>>







ஆறுமுகம்

அவசரவசரமாக

ஓடி வந்தும் அந்தப் பேருந்தை தவறவிட்டுவிட்டான்.

அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அந்தப் பேருந்தைப் பிடித்தால்தான் பத்து மணிக்கு அவன் போய்ச் சேரவேண்டிய அலுவலகத்துக்கு போக முடியும். அவன் முதலாளி படித்துப் படித்துச் சொல்லியிருந்தார்.

நீ என்ன செய்வியோ தெரியாது, கரெக்ட்டா பத்து மணிக்கு இந்தக் கவரைக் கொண்டுபோய் டவுன் ஆபீசில் கொடுத்துட்டு வந்துடு. கொஞ்சம் நீ, லேட்டாப்போனாலும் காரியம் கெட்டுப் போயிடும்ன்னு சொல்லித்தான் அனுப்பியிருந்தார்.

அவனும் காலையில் சைக்கிள்ள போய் பேப்பர் போடுற வேலையைக்கூட அரைமணி நேரம் முன்னதாகவே முடித்துவிட்டு, கடைகளுக்கு பால் சப்ளை பண்ற வேலையை எல்லாம் முடிச்சுட்டு, காய்கறி மார்க்கெட்டுக்கு போய் முதலாளி வீட்டுக்கு வேண்டிய காய்கறிகளை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, ரெண்டுவாளித் தண்ணீரை மொண்டு உடம்பை நனைத்துக்கொண்டு துணி மாற்றி கெளம்பும்போது,

" ஆறுமொவம் ஒரு வாய் பழசு சாப்புட்டுட்டுப் போடான்னு அம்மா சொன்னதைக்கூட காதில் வாங்காமல் விர்ரென்று சிட்டாய் பறந்து வந்தான், என்ன பிரையோஜனம்? பஸ் போயிருச்சே!?

ஆறுமுகத்துக்கு அவன் மேலேயே கோபம், கோபமாய் வந்தது.
குறுக்கு வழியாய் ஓடி நாட்டரசன் கோட்டைக்கு 15 நிமிசத்துல போனா அங்கருந்து டவுனுக்கு போற பஸ்ஸைப் புடிச்சிடலாமேன்னு ஒரு யோசனை ஆறுமுகத்துக்கு பளிச்சுன்னு ஞாபகத்துக்கு வர, அடுத்த வினாடியே வில்லிலிருந்து பொறப்பட்ட அம்பு மாதிரி நாட்டரசன் கோட்டைக்குப் போற ஒத்தையடிப் பாதையில ஓடத்துவங்கினான்.

ஆறுமுகத்துக்கு கொஞ்சம் நல்ல நேரம், டிரைவர் பஸ்ஸை மெதுவா நகர்த்திக்கொண்டிருந்தபோது ஓடிப்போய் ஏறிவிட்டான். பஸ்ஸில ஏறி உக்காந்ததும் தான் அவனுக்குச் சற்று நிம்மதி ஏற்பட்டது.

பஸ் காரைக்குடி வந்து சேர்ந்த போது மணி பத்து. அங்க இருந்து செக்காலைத் தெருவுக்கு மீண்டும் ஓட்டமும் நடையுமாக ஓடி ஒரு வளைவில் திரும்பிய போது கால் இடறி கீழே விழுந்தான். அவன் விழுந்த இடத்தருகே ஒரு தோல் பை ஒன்று கண்ணைப் பறிப்பது போல கிடந்ததைப் பார்த்தான்.
சுற்றுமுற்றும் பார்த்தான். ஆள் நடமாட்டமே இல்லை.
ஆறுமுகம், அந்தத் தோல்பையை எடுத்துத் திறந்து பார்த்தான். உள்ளே நூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள்.

ஒரு நிமிடம்.....ஆறுமுகத்துக்கு கையும் ஓடலை. காலும் ஓடலை. காய்ச்சலில் படுத்திருக்கும் தம்பிக்கு மருந்து வாங்க காசில்லாமல் நேற்று அவதிப் பட்டது நினைவுக்கு வந்தது. நம்மோட கஷ்ட்டத்தைப் போக்கவே கடவுள் இப்படி பஸ்ஸைத் தவறவைத்து நம்மை இந்தவழியா வரவழைச்சிருப்பாரோ, என்றெல்லாம் அந்தச் சில வினாடிகளில் அவன் எண்ணங்கள் ஓடியது.

கூடவே, அவனின் அம்மா சொல்வதும் நினைவுக்கு வந்தது.

"எதாருந்தாலும் சரி, நமக்குச் சொந்தமில்லாத பொருளை எடுக்கக்கூடாது; உயிரே போனாலும் அடுத்தவங்க காசுக்கு ஆசைப் படக்கூடாதுன்னு அம்மா சொன்னது நினைவுக்கு வர ஆறுமுகம் நடந்து கொண்டே யோசித்தான்.

என்ன இருந்தாலும் இவ்வளவு பணத்தை தொலைச்சவங்க என்ன பாடு படுறாங்களோ என்று எண்ணியவன், அடுத்த நிமிடம், அந்தத் தோல் பையின் மேலிருந்த முகவரியைப் பார்த்தான்.

முதலாளி கொடுத்த கவரை முதல்ல ஆபீசில் சேர்த்துட்டு, அடுத்த வேலை, இந்தப்பையை அந்தப் பைக்கு உரியவங்ககிட்ட ஒப்படைக்கிறதுதான், என்று முடிவு செய்துகொண்டான். அதே போல வந்தவேலையை முடித்துவிட்டு, அந்த தோல்பையிலிருந்த முகவரிக்குச் சென்றான்.

அது பெரிய பங்களா. 
அந்த வீட்டிலிருந்த கூர்க்காவிடம் ( காவல்காரனிடம் ) ஆறுமுகம் பேசிக்கொண்டிருந்தபோது உள்ளிருந்து ஒருவர் வந்து விசாரித்தார்.

ஆறுமுகம் தோல் பை பற்றிச் சொல்ல, ஆறுமுகத்தை உள்ளே அழைத்துச் சென்றார்.

அங்கு இருந்த பெரியவர், பையை வாங்கிக் கொண்டு, தம்பி, இந்தப் பையை திறந்து பார்த்தாயான்னு கேட்டார். ஆமாங்க பார்த்தேன்னு ஆறுமுகம் சொல்ல, இவ்வளவு பணம் இருந்தும் அதை நீ எடுத்துட்டுப் போகாம இங்க கொண்டுவந்து சேக்கணும்ம்ன்னு நெனைச்சியே இந்த மனம் எல்லாருக்கும் வராது.

இந்தப் பையில எவ்வளவு பணம் இருந்துச்சு தெரியுமா? அஞ்சு லட்ச ரூபா... அதிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டுக்கட்டை எடுத்து ஆறுமுகத்திடம் நீட்டினார், அந்தப் பெரியவர்.

" எதுக்குங்க? அது ஒங்க பணம். எனக்கு அந்தப் பணம் வேண்டாங்க. நான் வர்றேன்னு, சொல்லீட்டு ஆறுமுகம் கிளம்ப முற்பட்டபோது, தம்பி, இந்தக் காலத்துல இப்படி உன்னை மாதிரி ஒரு பையனை பாக்குறது அபூர்வம். உன்னை மாதிரி எனக்கு ஒரு பையன் இல்லையேன்னு தான் இத்தனை நாளும் கவலைப் பட்டேன். இன்னைக்கு அந்தக்கவலை தீர்ந்தது. உன்னை என்னோட வளர்ப்பு மகனா எடுத்துக்க முடிவு இப்பவே செஞ்சுட்டேன்.

வா முதல்ல உங்க வீட்டுக்கு போய் உங்க அப்பா அம்மாக்கிட்ட மத்ததப் பேசிக்கிர்றேன்னு சொல்லீட்டு ஆறுமுகத்தோட அவங்க வீட்டுக்கு கிளம்பினார் அந்தப் பணக்காரர்.

கால் ரெண்டும் தேய நடந்தும் ஓடியுமே பழக்கப்பட்ட ஆறுமுகம் இப்போது படகு போன்ற சொகுசுக் காரில்
போய்க் கொண்டிருக்கிறான்.

கதை தரும் நீதி : - பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது; ஆறுமுகம் போல இருக்கக் கற்றுக்கொண்டால் சொகுசான வாழ்க்கை எல்லோருக்கும் தானாகத் தேடிவரும்.


- ஆல்பர்ட்,அமெரிக்கா.

Labels: , , , , , , , , , ,

<<>>உதவி...!<<>>

ஆண்டவன்னு பெயர் உள்ள ஒருத்தர். அவர் பெயருக்கு ஏத்தாப் போல எதுக்கெடுந்தாலும் " எல்லாம் ஆண்டவன் பாத்துப்பான்" என்றே சொல்வார்.

ஒரு நாள் ஆண்டவன் இருந்த ஊர்ல மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழை ஓய்வு ஒழிச்சலின்றி அடைமழையா ஊத்த ஆரம்பித்தது. அஞ்சாறு நாள் பெய்த மழையில் ஊரே வெள்ளக் காடாக மாறிவிட்டது. அரசாங்கம் தண்ணீரில் தத்தளித்த அந்த ஊர் மக்களைப் பாதுகாப்பா படகு மூலமாக காப்பாற்றி பக்கத்து ஊருக்கு கொண்டுபோய் தங்க வைத்தனர்.
நம்மாளு ஆண்டவன் ,"ஆண்டவா என்னைச் சோதிச்சது போதும்.


என்னைக் காப்பாத்தப்பான்னு," கொஞ்சம் சத்தமாவே வாய்விட்டுச் சொன்னார். எங்க மெல்லச் சொன்னா அந்தக் கடவுளுக்குக் கேக்காமப் போயிட்டா என்ன செய்யிறதுன்னு அவர் அப்படிச் சத்தமாச் சொன்னார். அந்த நேரம் பார்த்து, அந்தப்பக்கமா நீச்சலடிச்சு வந்தார் கோடிவீட்டுக் குப்புசாமி. நம்மாளு, ஆண்டவன் அனாதரவா, குளிருல நடுங்கிக்கிட்டு இருக்கிறதப் பார்த்தார். பாத்துட்டுச் சொன்னார்.

"ஆண்டவனே! என்னோட இடுப்பைக் கெட்டியா புடிச்சுக்குங்க. நான் உங்களை பாதுகாப்பான இடத்துல கொண்டுபோய் விட்டு விடுறேன்" னார்.

அதுக்கு நம்மாளு ஆண்டவனோ, " கேட்டதுக்கு ரெம்ப நன்றிங்க. என்னைய எல்லாம், அந்த ஆண்டவன் பாத்துப்பான். அவனே என்னை எப்படியும் வந்து காப்பாத்துவான்," னார். உதவிக்கு வந்த குப்புசாமி ஆண்டவனை ஒரு மாதிரியாப் பாத்துட்டு நீந்திப் போயிட்டார்.

கொஞ்ச நேரம் ஆச்சு. இடுப்பளவு இருந்த தண்ணீர் நெஞ்சுவரை வந்துருச்சு. நம்மாளு ஆண்டவன், "கடவுளே என்னைக் காப்பாத்துப்பா,"ன்னார்.

கொஞ்ச நேரத்துல மீட்பு வேலைகளிலிருந்த ஒரு படகு ஆண்டவன் பக்கமா வந்தது. அந்தப் அப்டகுல இருந்தவர் சொன்னார்.

"சீக்கிரமா படகுல ஏறிக்கங்க. தண்ணீர் மட்டம் ஏறிக்கிட்டே இருக்கு. உங்க கையை இப்படிக் கொடுங்க. நாங்க தூக்கீருவோம். சீக்கிரமா பாதுகாப்பான இடத்துக்குப் போயிருவோம்," ன்னார்.

"என்மேல அக்கறை எடுத்துக் கேட்டதுக்கு நன்றிங்க ஐயா. கடவுள் என்னைக் காப்பாத்துவார். நீங்க என்னைப் பத்திக் கவலைப்பட வேண்டாம். நீங்க மத்தவங்களைக் காப்பத்துற வேலையைப் பாருங்க. என்னைய.... எல்லாம் அந்த ஆண்டவன் பாத்துப்பான்,"ன்னார் ஆண்டவன்.


நம்மாளுக்குப் புத்திமதி சொல்லி ஏத்தீட்டுப் போற அளவுக்கு படகுல வந்தவருக்கு நேரம் இல்லை. உதவிக்கு வந்த படகும் போய்விட்டது.

கொஞ்ச நேரத்துல கழுத்தளவுக்கு நீர்மட்டம் வந்துருச்சு. நம்மாளு ஆண்டவன், "கடவுளே இப்பவாவது வந்து நீ, என்னைக் காப்பாத்தக் கூடாதா?" ன்னு மூன்றாவது தடவையா தன் கோரிக்கையை வைத்தார்.

அப்ப, அந்தப் பக்கமா ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்துச்சு. ஹெலிகாப்டர்ல இருந்தவர் ஒலிபெருக்கி மூலமா, "இப்ப நாங்க ஒரு நூலேணி எறக்குறோம். அதப் பிடிச்சுக்கிட்டீங்கன்னா நீங்க பாதுகாப்பான எடத்துக்குப் போயிடலாம்,"ன்னு சொன்னார்.

"நீங்க உதவி பண்ண வந்ததுக்கு ரெம்ப நன்றிங்க! நீங்க மத்தவங்களைப் போய் காப்பாத்துங்க. என்னய எல்லாம் அந்த ஆண்டவன் பாத்துப்பான்,"னார் நம்மாளு. அதுக்கு ஹெலிகாப்டர்ல இருந்தவர் சொன்னார். ஒங்க கடவுள் நம்பிக்கைய கொறையாச் சொல்லலை. அடிக்கிற காத்து மழையில அம்மிக்கல்லே காணாமப் போயிக்கிட்டு இருக்கு. இன்னும் நிலைமை ரெம்ப மோசமாகப் போகலாம். நாங்க மறுபடியும் இந்தப் பக்கம் வர வானம் ஒத்துழைக்குமான்னு தெரியாது. அதனால நீங்க இப்பவே வந்துருங்க," அப்டீன்னார்!

ஆனா இவரோ, பிடிவாதமா "என்னைய ஆண்டவன் காப்பாத்துவான். நீங்க போங்க,"ன்னு சொல்லீட்டார். ஹெலிகாப்டரும் அந்த இடத்தைக் காலி செஞ்சுட்டுப் பறந்துருச்சு.

ஹெலிகாப்டர் வந்து போன கொஞ்ச நேரத்துல வந்தது பெரு வெள்ளம்! அந்த வெள்ளம் நம்மாளு ஆண்டவனை, அந்த ஆண்டவன்கிட்டயே ஒரேயடியா கொண்டு போய் சேர்த்துருச்சு.
நம்மாளு ஆண்டவன் ரொம்பக் கோபமா கடவுளப் பார்த்துக் கேட்டார்.


"ஒரு தடவையில்ல ரெண்டு தடவையில்ல மூன்று தடவை என்னைக் காப்பாத்தச் சொல்லிக் கேட்டேன். ஆனா, இப்படி இதயமே இல்லாத கடவுளா இருப்பீங்கன்னு நான் நினைக்கலை,"ன்னார்.


கடவுள் அமைதியாச் சொன்னார்.

"நீ மூன்று தடவை என்னைச் சத்தம் போட்டுக் காப்பாத்தச் சொன்னாய். நானும் மூன்று தடவை வந்தேன். நீதான் என்னோட உதவியை ஏத்துக்கலை. நான் என்ன பண்ணுவது?" என்றார் கடவுள்.

"என்னது? மூணு தடவை வந்தீங்களா?" என்று ஆச்சரியப் பட்டார் நம்மாளு ஆண்டவன்!

"ஆமா நீ என்னை நினைச்சு குரல் கொடுத்த மூன்று தடவையும் நான் தான் உனக்கு உதவியை அனுப்பினேன். முதல் தடவை கோடி வீட்டுக் குப்புசாமியை அனுப்பினேன். ரெண்டாவது தடவை படகை அனுப்பி உன்னைக் காப்பாத்தச் சொன்னேன்.

மூணாவது தடவையா ஹெலிகாப்டரை அனுப்பி உன்னைக் காப்பாத்த நினைத்தேன். இவர்கள் மூலமாகத் தான் நான் வந்தேன். ஆனா ஒவ்வொரு முறையும் நான் அனுப்பிய உதவியை வேண்டாம்ன்னு மறுத்துட்டே. நான் என்ன பண்ண முடியும்?

நம்மாளுக்கு அப்பத்தான் மண்டையில சுரீர்ன்னு பட்டது. ஆகா, கடவுளே வருவார்ன்னு ஏமாந்துட்டமேன்னு வருத்தப்பட்டார் நம்மாளு ஆண்டவன்! கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்து என்ன பயன்?

கதை தரும் நீதி : இந்தக் கதையில் வரும் ஆண்டவன் போல நம்மில் பலர் இருக்கின்றோம். நமக்குத் தேவையானவற்றை கடவுள் யார் மூலமாகவாவது அனுப்பி உதவுகிறார். அந்த உதவிகளை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் நம் முன்னேற்றமும் வெற்றியும் அடங்கியிருக்கின்றது.
விபரம் புரியாத வயதில் விடயங்களைக் கற்றுத் தந்து தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற நிஜ தெய்வங்கள் பெற்றோர்கள்!புரியாத விடயங்களை விளக்கி வழிகாட்டும் கடவுளாக அனுபவம் மிக்க பெரியோர்கள்!! உலக அனுபவங்களையும், பாடங்களையும் கற்றுத் தருகின்ற ஆசிரியர்கள்!!!
இப்படி வாழ்க்கையில் கடவுள் நமக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் வடிவில் வந்து உதவிக் கொண்டேதானிருக்கிறார். இதை நன்கு புரிந்துகொண்டு முயற்சி என்ற தன்னம்பிக்கை விதைகளை உங்கள் மனங்களில் விதைத்து, சந்தர்ப்பம் என்ற நீர் ஊற்றி, கிடைக்கும் உதவி என்ற உரத்தை சரியாகப் பயன்படுத்தி உற்சாகப் பயிர் வளர்த்தால் நீங்களும் வானம் தொடலாம்தானே!
-ஆல்பர்ட், அமெரிக்கா.

<<>>முயல் கறி...!<<>>


ரு காட்டில் முயல் குடும்பம்
வாழ்ந்து வந்தது. முயல் அப்பா, அம்மாவுக்கு அன்று ரெம்பமகிழ்ச்சியான நாள்! காரணம்,
முயல் அம்மாவுக்கு இரண்டு முயல் குட்டிகள் பிறந்த சந்தோசம்!
முயல் குட்டிகள் கொழுக் மொழுக்கென்று பார்க்க அழகாக ருந்தது. சீமா, பூமா என்று இரண்டு முயல் குட்டிகளுக்கும் பெயர் வைத்து, அக்கம் பக்கம் உள்ள உறவு முயல்களைஎல்லாம் அழைத்து மெகா காரட் விருந்து வைத்துக் கொண்டாடியது, முயல் அப்பா,அம்மா.

சீமாவும் பூமாவும் பக்கத்து காரட் தோட்டத்தில் விளையாடுவதென்றால் ஒரே சந்தோசம். ஆனால், அப்பா, அம்மா முயல்கள் அப்படி அதிக நேரம் விளையாட அனுமதிப்பதில்லை.
ட்கள் நடமாட்டம் அறிந்து குட்டி முயல்களுக்கு வேகமாக ஓடி வராமல் ஆபத்தில்சிக்கிக்கொண்டால் என்னசெய்வது என்ற கவலையால் அனுமதிப்பதில்லை.அப்பா,அம்மா உணவு தேடச் சொல்லும்போது சீமவையும் பூமாவையும் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு போவார்கள். ஆனால் அவர்கள் தலை மறைந்ததும்சீமாவும் பூமாவும் காரட் தோட்டத்துக்கு விளையாட ஓடிவிடுவார்கள்.

இப்படி ஒருநாள் சீமா, பூமா முயல் குட்டிகள் விளையாடச் சென்றபோது அந்தத் தோட்ட விவசாயி கவனித்து பிடித்து விட்டார். அப்போது தந்தை முயலும், அம்மா முயலும் அங்கே வந்து சேர்ந்தன. அப்பா முயல் விவசாயியிடம் வந்து, எங்க குட்டிகள் ரெண்டையும் விட்டுவிடுங்கள் என்றுகெஞ்சிக் கேட்டது.

விவசாயியோ, ரெண்டு முயல் குட்டியையும் கொண்டு போய் முயல் கறி செஞ்சு சாப்பிட ஆசைப்பட்டுத்தான் பிடிச்சு இருந்தார். எனவே விவசாயி ரெண்டு குட்டிகளையும் விட்டுவிடுகிறேன். அதற்குப் பதிலாக நான் உன்னைப் பிடிச்சுக்கிட்டுபோக சம்மதம் சொன்னா விட்டுவிடுகிறேன் என்றார். சரி, என்று அப்பா முயல் சொல்லஅப்பா முயலைப் பிடித்துக்கொண்டு குட்டி முயல்களை கீழே விட்டுவிட்டார்.

உடனே அம்மா முயல் வந்து விவசாயியிடம், இந்தக் குட்டிகள் அப்பா இல்லாம தூங்காது. என்னைப் பிடிச்சுக்கிட்டு அவரை விட்டுவிடுங்கள் என்று அம்மா முயல் கெஞ்சியது. விவசாயியும் மனம் இரங்கி அப்பா முயலை விட்டுவிட்டு அம்மா முயலைப் பிடித்துக் கொண்டார்.


இப்போது அப்பா முயலும், குட்டி முயல்களும் விவசாயி முன்னால் வந்து, எங்க அம்மாவை நீங்க பிடிச்சுட்டுப் போனா எங்களுக்கு அம்மா இல்லாம கஷ்ட்டமா இருக்கும். அதனால எங்க எல்லாரையுமே நீங்க கொண்டு போயிருங்க என்று சொல்லி கண்ணீர் வடித்தது குட்டிகள். அப்பா முயலும் என்னோட குட்டி சொல்றதுதான் சரி. நாங்களும் வர்றோம் என்று சொன்னது.

முயல் குட்டிகளின் கண்ணீரும், குட்டிகள் மீது பெரிய முயல்களுக்கும் உள்ள அன்பையும் கண்டு விவசாயி திகைத்துப் போனார்.
" சே! என்ன காரியம் பண்ண இருந்தோம். சாப்பிடும்வரைதான் ருசியான சமாச்சாரம் நமக்கு. ஆனால் முயல்களுக்கோ தங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை நிரந்தரமாக இழந்து தவிக்கும் உணர்வு எப்போதும் ஏற்பட்டுவிடுமே. விவசாயிமனம் மாறினார். அம்மா முயலை கீழே இறக்கி விட்டார்.

இனிமேல் இது போன்று உயிர்களைக்கொன்று புசிக்கும் வழக்கம்
இன்றோடு சரி என்றும் முடிவு செய்துகொண்டார். முயல்கள் எல்லாம் தங்கள் கைகளைக் கூப்பி விவசாயிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டது.

முயல் குடும்பம் சந்தோசமாக வீட்டுக்குத் திரும்பியது. சீமாவும் பூமாவும் அப்பா, அம்மா பேச்சைக் கேட்காமல் போய்த்தானே வம்பில் மாட்டிக்கொண்டோம். இனிமேல் அப்பா, அம்மா சொல்வதைத் தட்டாமல் கேட்க வேண்டும் என்று தீர்மானித்தது. அப்பா,அம்மா விடம் சீமாவும் பூமாவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

கதை சொல்லும் நீதி :- மாணவத் தம்பி, தங்கைகளே இந்த முயல் குட்டி கதையிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? அப்பா, அம்மா என்பவர்கள் உங்களைப்போல வாழ்ந்து பெரியவர்கள் ஆனவர்கள். அவர்களுக்கு எது நல்லது? எது கெட்டது என்று தெரியும்.

அவர்கள் சொல்படி கேட்டு நடந்தால் எந்தப் பிரச்னையும் நமக்கு வராது என்பதைத் தெரிந்து கொண்டீர்களா? பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் பெற்றோர் எப்படித் துடித்துப் போவர்கள்? நல்ல பிள்ளைகள்தான் நல்ல மனிதர்களாக முடியும்.

இது மட்டுமா? அந்த விவசாயியை அசைவம் சாப்பிடுவதிலிருந்தே மாற்றியமைத்தது எது? என்பதையும் சிந்தியுங்கள்!

-ஆல்பர்ட்,அமெரிக்கா.

<<>>பெரிய... பெரிய ஆசை...!?<<>>


முன்னொருகாலத்தில் ஏழை விறகுவெட்டி ஒருவன் ருந்தான். காலையில் காட்டுக்கு விறகு வெட்டப்போவான்.மாலையில் வெட்டிய விறகை விற்க பக்கத்து நகரத்துக்குப் போவான். விறகை விற்றுக் கிடைக்கும் பணத்தில்வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்வான்.
அவன் மனைவியோ நாக்கு ருசியா சமைச்சுச் சாப்பிட வாங்கிவருவதில்லை என்று சண்டை போடுவாள்.விறகுவிற்ற காசுக்கு வ்வளவுதான் வாங்க முடிந்தது என்பான். சுள்ளி விறகா வெட்டி வித்தா துதான்கிடைக்கும். அடுத்த வீட்டு வீரன் பாருங்க எவ்வளவு சம்பாதிச்சுட்டு வருகிறார். நீங்களும் ருக்கீங்களேஎன்று திட்டுவாள்.
வீரன் நாலுபேரை ஏமாத்திச் சம்பாதிக்கிறான். ன்னைக்கு நல்லா ருக்கலாம். ஒருநாள் ல்லாட்டிஒருநாள் வீரன் ஜெயிலுக்குத்தான் போகணும். நமக்கு வயிறார சாப்பாடு கிடைக்குது. அத வச்சு சந்தோசமாருக்கக் கத்துக்க என்பான், விறகு வெட்டி.
பசியாரச் சாப்பிட்டால் போதுமா? நாம நாலு காசு சம்பாதிச்சு வசதியா வாழவேண்டாமா? காட்டுல பெரியமரமாப் பாத்து வெட்டி வித்தா நமக்கும் நாலு காசு சேரும் என்பாள்.
எதோ, சுள்ளிவிறகு வெட்டி தினமும் வயித்தைக் கழுவுறதே அந்தப் பெரிய மரங்களால் தான்! உன் பேச்சைக்கேட்டு பெரிய மரமா வெட்டி வித்தா கொஞ்ச நாளைக்கு நாம நல்லாருக்கலாம். அப்புறமா, பெரியமரங்களும்ருக்காது; சுள்ளி வெறகுக்கும் வழி ருக்காது. நாம பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் என்பான்விறகுவெட்டி.
தைக் கேட்டதும், " நாம உருப்புடாம ருக்கிறதுக்குக் காரணமே துதான் என்று அழத் தொடங்கிவிடுவாள்.விறகுவெட்டி மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காக சரிசரி... னிமே பெரிய மரமா பாத்து வெட்டுறேன்,என்று சொல்வான். அப்புறம் வழக்கம்போல் சுள்ளிவிறகு வெட்டிப் போய் விற்று வருவான். மனைவி சண்டைபோடுவதும் வன் சமாதானப்படுத்துவதும் வாடிக்கையாக நடப்பதுதான்.
அன்று விறகுவெட்டி நீண்ட நேரம் காட்டில் அலைந்து திரிந்தும் போதுமான விறகு கிடைக்கவில்லை. மிகவும்களைத்துப் போய் வீடு திரும்பலாம் என நினைத்தான். அப்போது ஒரு பெரிய மரம் ஒன்றைப் பார்த்தான். சரி.ன்றாவது மனைவி சொன்னமாதிரி ந்த மரத்தை வெட்டி விற்போம். மீன், அது துன்னு வாங்கீட்டுப்போவோம் என்று நினைத்துக் கொண்டான். அந்த மரத்தை நெருங்கி கோடாலியை வெட்டுவதற்கு ஓங்கினான்.
" வெட்டாதே! " என்ற சப்தம் கேட்டது. விறகுவெட்டி சுற்றும் முற்றும் பார்த்தான். ஒருவரும் ல்லை. மீண்டும்வெட்ட கோடாலியை ஓங்கினான். மீண்டும், "வெட்டாதே ! நில்! என்று சத்தம் வந்தது.
விறகுவெட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது, " நான் தான் மரம் பேசுகிறேன். என்னை நீ வெட்டாமல்விட்டுவிடு, நான் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்," என்றது மரம். மரம் பேசியதைக் கேட்டுச்சரியமடைந்தான், விறகுவெட்டி. சரி, ன்று பட்டினி தான் என்று சோர்ந்தும் போனான்.
கவலைப்படாதே! உனக்கு என்ன வேண்டுமோ கேள். நான் தருகிறேன்..... மீண்டும் மரம் பேசியது.
எனக்கு ஒன்றும் வேண்டாம். என் மனைவிக்குத்தான் வசதியா வாழணும்னு சை! எனக்கு எதுவும் வேண்டாம்.என் மனைவி நச்சரிப்பு ல்லாம ருந்தா அதுவே போதும், என்றான் விறகு வெட்டி.
உன் நல்ல மனசு எனக்கு ரெம்பப் பிடிச்சிருக்கு. நீ விரும்பியது போல எல்லாம் நடக்கும். நீ, வீட்டுக்குப் போய்பார்! என்றது மரம்.
விறகு வெட்டி வீட்டிற்குப் போனான். அவன் வீடு ருந்த டத்தில் பெரிய பங்களா ருந்தது. வீட்டுக்குவெளியே தயங்கி நின்றான். அப்போது அவன் மனைவி கழுத்து நிறைய நகைகளுடன், பட்டுச் சேலை உடுத்திவெளியே வந்தாள். மரத்தின் மகிமையை எண்ணி வியந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததும்அவனும் பட்டு வேட்டி, மோதிரம் என்று விறகுவெட்டி பணக்காரனாக மாறிப் போனான். நடந்ததை மனைவியிடம்சொன்னான். நல்லவேளை, தையாவது புத்திசாலித்தனமா கேட்டீங்களே என்று மனைவி சொல்லிச்சந்தோசப் பட்டாள்.
கொஞ்ச நாள் னது. விறகுவெட்டியின் மனைவிக்கு ந்த வாழ்க்கையும் சலித்துப்போனது. ந்த ஊர்ல நம்மைப்போல் பணக்காரர்கள் ருக்கிறார்கள். எல்லா பணக்காரர்களும் மதிக்கிற மாதிரி ந்த ஊர் ஜமீன்தாரா கணும்.அப்பத்தான் நம்மை எல்லாரும் மதிப்பாங்க. நீங்க அந்த மரத்திடம் போய் சொல்லி ஜமீன்தாரா க்கச் சொல்லுங்க,என்றாள். விறகுவெட்டி மறுத்தான். னால் மனைவியின் பிடிவாதம் வேறுவழியில்லாமல் மரத்திடம் போனான்.
மரம் முன்பாக விறகுவெட்டி போனதுமே, என்ன ஜமீன்தாராகணுமா? என்று கேட்டது. அது என் மனைவியோட சை, என்றான்.சரி. வீட்டிற்கு போ, என்றது மரம். விறகுவெட்டி வீட்டிற்கு திரும்பினான். அந்த நாட்டு ராஜா, வனை ஜமீன்தாராக்கியசெய்தி காத்திருந்தது. கொஞ்ச நாள் சென்ற பின் ஜமீன்தார் வாழ்க்கையிலும் சலிப்புத் தட்டிப் போக ந்த நாட்டுக்கேராஜா க்கிட மரத்திடம் ன்றே போய்க் கேளுங்கள் என்றாள் அவன் மனைவி. அவனும், வேண்டாம் ந்த வாழ்க்கையில்என்ன குறை கண்டாய் என்று சொல்லிப் பார்த்தான். அவளின் பிடிவாதம் அவன் மீண்டும் மரத்தின் முன் வந்து நின்றான்.
ராஜாவாக்கிப் பார்க்க சை வந்துவிட்டதா? உன் மனைவிக்கு என்று கேட்டது மரம். உன் மனைவியின் சைப்படியேநீ ராஜா வாய்! னால் ஒரு நிபந்தனை. உன் மனைவிக்கு ந்த ராஜா வாழ்க்கையிலும் சலிப்புத் தட்டி என்றைக்காவதுவிறகு வெட்டி வாழ்க்கையே மேல் என்று எப்போது எண்ணினாலும் நீ மறுபடியும் விறகுவெட்டியாகிவிடுவாய் என்று சொல்லிஅனுப்பியது மரம். வீட்டுக்கு வந்தான். அரண்மனையின் பட்டத்து யானை மாலையுடன் வீட்டு முன் நின்றது. விறகுவெட்டிப்போது அந்த நாட்டு ராஜா!
ராஜாவாகப் பொறுப்பு ஏற்றதும் ராஜாங்க அலுவல் அதிகமாக ருந்தது. தனால் விறகுவெட்டி ராஜா தனது மனைவியிடம்பேசக்கூட நேரம் ல்லாமல் போனது. பகலில் அமைச்சர்கள், அதிகாரிகள் என்று எந் நேரமும் ஓய்வின்றி ருந்தான். ரவில்நகர்வலம், ஒற்றர்களுடன், படைத்தலைவர்களுடன் லோசனை ப்படியாக ராஜா ரவு எந்த நேரத்தில் வந்து படுப்பார்என்றே தெரியாது.
காலையில் மனைவி எழுந்திருக்கும் முன்பு நீராடி கோட்டை கொத்தளங்களைப் பார்வையிடப் போய்விடுவார், ராஜா. தனால் கொஞ்ச நாளில் ராஜ வாழ்க்கையும் விறகுவெட்டியின் மனைவிக்கு வெறுத்துப் போக பேசாமல்"விறகுவெட்டி குடும்ப வாழ்க்கையே மேல்" என்று வாய்விட்டே சொன்னாள்! அன்று எதிரி நாட்டு மன்னன் படைஎடுத்து வந்துதேசத்தைக் கைப்பற்றினான். விறகுவெட்டி தலை தப்பினால் போதும் என்று மனைவியை அழைத்துக் கொண்டு தான் முன்புவசித்த ஊருக்கே ஓடி வந்துவிட்டான்.
ப்போது, விறகுவெட்டி காட்டுக்குப் போய் முன்பு போல் விறகு வெட்டி சந்தோசமாக வாழ்க்கை நடத்தினான். அவன்மனைவியும் பேராசையை விட்டுவிட்டு கிடைப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்தப் பழகிக் கொண்டாள்.
நீதி:- தம்பி, தங்கைகளே! நமக்குக் கிடைத்ததை வைத்து சந்தோஷமாக ருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களிடம் ருக்கும் வசதி வாய்ப்பை விட கூடுதல் வசதி வாய்ப்பு உள்ளவர்களைப் பார்த்து நமக்கு அவர்களைப் போல ல்லையே என்று ஏங்கக் கூடாது! உங்களை விட வசதி வாய்ப்புக் குறைந்தவர்களை எண்ணிப் பார்த்து அவர்களைவிட நாம் சந்தோஷமாக ருக்கிறோமே என்று எண்ணுங்கள். அதே நேரத்தில் காலம் கரைத்துவிட முடியாத கல்வியை நீங்கள் கருத்தாக கற்றால், பிற்காலம் உங்களுக்கு நற்காலமாய் மலரும்! என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


ஆல்பர்ட்,அமெரிக்கா.

<<>>முட்டாள் ராஜாவின் முடிவு.<<>>



ஒரு ஊரில் ஒரு ராஜா.
அந்த ராஜா, தன் மனம் போன
போக்கில் ஆட்சி செய்தான்.
திடீர், திடீரென்று மக்களுக்கு
முட்டாள்தனமாக கட்டளை பிறப்பிப்பான். நல்லவர்களுக்குத்தண்டனை கொடுப்பான். கொலைகாரனை, கொள்ளைக்காரனை விடுதலை செய்வான். அவனிடம் இல்லாததால் திருடினான். தப்பு செய்தவனை கொலை செய்தான். அதில்தவறு ஏதும் இல்லை என்று சொல்வான், முட்டாள் ராஜா.


யாராவது நியாயம் சொல்கிறேன் என்று போனால் அவர்கள் தலையை சீவும்படி உத்திரவு போடுவான்.

இதற்குப் பயந்துமுட்டாள் ராஜாவை யாரும் நெருங்குவதில்லை. ஆனால், மக்கள், இந்த முட்டாள் ராஜவை ஒழித்துக் கட்ட யாராவது முன்வரமாட்டார்களா என்று ஏங்கினார்கள்.


அந்த சந்தர்ப்பமும்ஒருநாள் வந்தது.அந்தப் பட்டணத்தில்

ஒரு பெரிய பணக்காரர். அந்தப் பணக்காரர் வீட்டில் திருட நினைத்தான், ஒரு திருடன். அந்தப்பணக்காரார் ஒருநாள் தன் குடும்பத்தோடு வெளியூருக்குக்கிளம்பினார். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று திருடன் பணக்காரர் வீட்டில் சுவர் ஏறிக்

குதித்து உள்ளே நுழைந்தான்.


பணக்காரர் பாதுகாப்பாக தங்க நகைகள், காசை எல்லாம் வைத்து இருந்த ஒரு பெரிய இரும்புப் பெட்டியைக் கண்டுபிடித்தும்

விட்டான். ஆனால் என்ன முயன்றும் அந்த இரும்புப் பெட்டியைத் திறக்கமுடியவில்லை. இரும்புப் பெட்டியும்தூக்கிச் செல்லக்கூடியதாக இல்லை. அங்கிருந்த கடப்பாரையின் உதவியால் இரும்புப் பெட்டியைச் சுவர் ஓரமாக நகர்த்தினான். பின்னர் சுவரை இடித்து அந்தத் துவாரம்வழியாக வீட்டுக்கு வெளியே தள்ளிவிட்டு இவனும் குதித்தான்.


அப்போது, எதையோ மறந்துவைத்து விட்டுப் போன பொருளை எடுக்க வந்த பணக்காரரிடம் திருடன் வசமாக மாட்டிக் கொண்டான். திருடனைக் கொண்டுபோய் ராஜா முன்னால் நிறுத்தினார், பணக்காரர்.முட்டாள் ராஜா விசாரணையைத் துவக்கினார்.

பணக்காரர் நடந்ததைச் சொன்னார். திருடனுக்குத் தக்க தண்டனை வழங்கவேண்டும் என்றும் பணக்காரர் கேட்டுக் கொண்டார்.


உடனே திருடன், " மக்கள் போற்றும் மகாராஜாவே! நான் எனது நகை வைத்திருந்த இரும்புப் பெட்டியின் சாவியைத் தொலைத்துவிட்டேன். மாற்றுச் சாவி போடுவதற்காக எடுத்துப்போனேன். வழியில் பார்த்த வர் என் பணப்பெட்டியை அபகரிக்க எண்ணி இப்படி நாடகமாடுகிறார், என்று அழகாக ஒரு பொய்யைச் சொன்னான் திருடன்.


பணக்காரர் எதோ சொல்ல வாய் திறந்தார். உடனே முட்டாள்

ராஜா, " நீ பேச வேண்டாம். அடுத்தவர் சொத்தை அபகரித்தே நீ பணக்காரனாகிவிட்டாய். யாரங்கே? இந்தப் பணக்காரனைச் சிறையில் தள்ளுங்கள், " என்று உத்திரவிட்டான்.


பணக்காரர் பார்த்தார். ஆயுள் முழுக்க முட்டாள் ராஜா சிறையில் வைத்துவிடுவானே, என்று சமயோசிதமாக ராஜாவிடம் பேசினார். " அண்டைநாடெல்லாம் புகழும் அருமை ராஜாவே!


என்னிடம் இருப்பது போன்ற அதே மாதிரி இரும்புப் பெட்டியை செய்து இவரிடம் விற்ற சாரி தான் இதற்கெல்லாம் காரணம். எனவே தண்டிக்கப்பட்வேண்டியது அந்த இரும்புப் பெட்டியைச் செய்த சாரிதான், ராஜாவே " என்றார் பணக்காரர்.


உடனே ராஜா, " பணக்காரர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. இரும்புப் பெட்டியைச் செய்த சாரியை கூட்டிவரும்படி உத்திரவிட்டான். சாரி வந்ததும்," நீ ஏன் ஒரே மாதிரி இரும்புப் பெட்டியைச் செய்து கொடுத்தாய்? உன்னால் பணக்காரர் ஜெயிலுக்குப் போகவேண்டிய நிலையை உருவாக்கிவிட்டாய்.


இந்தக்குற்றத்திற்கு உனக்கு நான் மரண தண்டனை விதிக்கிறேன்,"என்றார் முட்டாள் ராஜா.சாரி பார்த்தார்.

முட்டாள் ராஜாவிடம் உண்மையைச் சொன்னாலும் எடுபடாது.

தான் தப்பித்தால் போதும் என்று, " ஏழுலகம் புகழும் ராஜாவே!


இந்தத் தவறுக்கு நான் காரணமல்ல. எனது வேலைக்காரன் செய்த தவறு. எனவே என் வேலைக்காரன்தான் தண்டிக்கப்படவேண்டும்," என்றான் சாரி.


" அடடே! அப்படியா! நல்ல வேளை. நான் உன்னைத் தண்டிக்க மாட்டேன். நீபோகலாம். உன் வேலைக்காரனைத் தண்டிக்கிறேன்," என்றார் ராஜா.


வேலைக்காரன் வந்தான்." உன்னால் அநியாயமாக உன் முதலாளியும், பணக்காரரும் சிறைக்குப் போக இருந்தார்கள். ஒரே மாதிரி இரும்புப் பெட்டி செய்து குழப்பத்துக்கு காரணமான உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன்." என்றர் முட்டாள் ராஜா.


வேலைக்காரன் தன் தலையைக் காப்பாற்றிக்கொள்ள அவனும் ஒரு பொய் சொன்னான்.


" ராஜாவுக்கெல்லாம் ராஜாவே! நான் இரும்புப் பெட்டி செய்து கொண்டிருக்கும்போது அந்தவழியாக ஒரு இளம்பெண் வந்தாள்.


அவள் அழகில் மயங்கிவிட்டதால், முதலில்செய்த பெட்டியைப் போலவே இரண்டாவதையும் செய்ய நேர்ந்தது. அந்தப் பெண் என் வேலை நேரத்தில் குறுக்கிடாமலிருந்தால் இந்தத் தவறே நடந்திருக்காது. எனவேதாங்கள் அந்தப் பெண்ணைத்தான் தண்டிக்கவேண்டும்," என்றான் வேலைக்காரன்.


" நல்லவேளை! உன்மையைச் சொன்னாய். உன்மையைச் சொன்னதால் தப்பினாய். நீபோகலாம். அந்தப் பெண்ணைத் தூக்கிலிடுகிறேன்," என்றான் முட்டாள் ராஜா.காவலர்கள் அந்தப் பெண்ணை அழைத்து வந்து ராஜா முன்பாக நிறுத்தினர்.


"சாரியின் வேலையாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது நீ ஏன்? அந்தப்பக்கம் போனாய். உன்னால் எத்தனை விபரீதம் நடந்துவிட்டது தெரியுமா? உன்னைத் தூக்கிலிட்டு இந்த விவகாரத்தை முடிக்கப்போகிறேன்," என்றார் ராஜா. மதி கெட்ட ராஜாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மதி நுட்பமாக பதில் சொன்னாள் அந்தப்பெண்.


உலகம் போற்றும் உத்தம ராஜாவே! நான் நாட்டியம் கற்றுக்கொள்ள அந்தவழியாகத்தான் போயாக வேண்டும். நாட்டியம் சொல்லித்தரும் சிரியர் விரைந்து கற்றுக்கொடுக்காமல்காலை, மாலை என்று அடிக்கடி வரச் சொன்னதால் நான் அந்தவழியாகப் போக வேண்டி வந்தது. என்னை நாட்டியம் கற்க அடிக்கடி வரச் சொன்ன நாட்டிய ஆசிரியரைத்தான் நீங்கள் தண்டிக்கவேண்டும்," என்றாள் அந்தப்பெண்.


"அப்படியா! நீ போகலாம். நாட்டிய ஆசிரியர் தான் உண்மைக் குற்றவாளி என்று அறிந்து கொண்டேன், என்று சொன்னராஜா நாட்டிய ஆசிரியரை கைது செய்து கொண்டு வரும்படி உத்திரவிட்டான்.


நாட்டிய ஆசிரியரோ அப்பாவி. அவருக்கு புகார், வழக்கு எதுவும் புரியவில்லை. ராஜாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு புரியலை. மெளனமாக நின்றார். உடனே முட்டாள் ராஜா, இவன்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்துவிட்டேன், என்று கூறி உரக்கச் சிரித்தான்.


நாளை சூரிய உதயத்தின் போது நடன ஆசிரியர் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட உத்திரவிடுகிறேன். இனிமேல் அவன் காரணம். இவன் காரணம், என்றுசொல்லி யாரும் தப்பிக்கமுடியாது என்பதற்கு ந்த வழக்கு உதாரணமாகவும் தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும் இதை நாட்டு மக்களுக்கு சேனாதிபதி அறிவிக்க கட்டளையிடுகிறேன்," என்று முட்டாள் ராஜா மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.


நடன ஆசிரியர் மனைவி பக்கத்துவீட்டில் வசிக்கும் வீரசேணன் என்ற வாலிபரிடம் சொல்லி எப்படியாவது தன்கணவரைக் காப்பாற்றவேண்டும் என்று கெஞ்சி அழுதாள்.


வீர சேணன் புத்திசாலி. அழாதீர்கள். முட்டாள் ராஜாவின் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு உங்கள் கணவரை நான் மீட்டு வருகிறேன்," என்று தைரியம்சொன்னான்.


வீர சேணன் தன் நண்பனை அழைத்து தனது திட்டத்தை அவனிடம் சொல்லி, சரியான நேரத்தில் தூக்கு மேடை மைதானத்துக்கு வந்துவிடவேண்டும் என்றுசொல்லி அனுப்பினான்.


தூக்கிலிடும் நேரம் நெருங்க, நெருங்க மக்கள் கூட்டமும் அதிகரித்தது. முட்டாள் ராஜா தனது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தான். இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா? என்று பொதுமக்கள் வேதனையோடு பேசிக்கொண்டனர்.


நாட்டிய ஆசிரியரின் மனைவி சிந்திய மூக்கும் அழுத கண்ணீருமாக அங்கே பார்ப்பவர்கள் மனது கலங்கநின்று கொண்டிருந்தார். அப்போது முட்டாள் ராஜாவின் மெய்க்காப்பாளரோடு யாரோ உரத்த குரலில் சத்தம் போட்டு பேச ராஜா, என்ன சப்தம் அங்கே? என்று கேட்டான்.


தங்களைப் பார்த்தே ஆகவேண்டுமென்று இருவர் தகராறு செய்கிறார்கள். தூக்குத்தண்டனை நிறைவேற்றிய பிறகு ராஜாவை அவையில் சந்திக்கலாம் என்று சொன்னோம். ஆனால் நாட்டிய ஆசிரியருக்குப் பதிலாக தாங்கள் அந்தத் தண்டனையை ஏற்கவேண்டும்.


அதனால் ராஜாவை இப்போதே சந்தித்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கின்றனர்," என்று மெய்காப்பாளர் ராஜாவிடம் தெரிவித்தார். அழைத்து வாருங்கள் என்று வரப்போகும் ஆபத்தை அறியாமல், ராஜா மீசையை நீவிவிட்டுக்கொண்டே ராஜ கம்பீரமாகச் சொன்னார்.


வீரசேணனும் அவனது நண்பனும் ராஜா முன் நிறுத்தப்பட்டனர்.
உடனே சற்றும் தாமதிக்காமல் வீரசேணன், " ராஜனுக்கெல்லாம் ராஜனே! நீதி நெறி தவறாது ஆட்சி நடத்தும் மகாராஜாவே! உன் புகழ் ஓங்குக! நாட்டிய ஆசிரியருக்குப்பதிலாக என்னைத் தூக்கிலிடுங்கள் உங்களுக்குக் கோடிப்புண்ணியம், " என்றான் வீரசேணன்.


உடனே சற்றும் தாமதிக்காமல் வீரசேணனின் நண்பன், " இல்லை மகாராஜா,என்னைத்தான் நீங்கள் தூக்கிலிட வேண்டும் " என்றான்.
ராஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பயித்தியமா பிடித்திருக்கிறது உங்களுக்கு. தூக்கில் தொங்க நான், நீ என்று போட்டி போடுகிறீர்களே? சரியான மடையர்களாக இருக்கிறீர்களே! " என்றான் ராஜா.


வீரசேணனின் நண்பன்," எக்காரணம் கொண்டும் இவனைத் தூக்கில் போடாதீர்கள். என்னைத் தூக்கில் போடுங்கள், என்றான் ராஜாவிடம். " ஆசையைப் பாரு, நீ ராஜா ஆயிடலாம்னு பாக்குறியா? நான் விடமாட்டேன். ராஜா, என்னைத் தூக்கிலிடுங்கள், என்றான் வீரசேணன் அவசர,அவசரமாக.


ராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. " என்ன உளறுகிறீர்கள்? தூக்கிலிட்டால் ராஜா ஆகிவிடுவீர்களா? புரியும்படி சொல்லாவிட்டால் இப்போதே உங்கள் இருவர் தலையையும் சீவிவிடுவேன், என்றார் ராஜா.


"ராஜா! முக்காலமும் உணர்ந்த மாமுனிவரைச் சந்தித்தோம். அவர்தான் சொன்னார். ராஜாவின் கட்டளையால் யார் இந்த நேரத்தில் தூக்கிலிடப்பட்டு மரணமடைகிறாரோ,அவர் இந்த தேசத்துக்கு அடுத்த ராஜா! அதுமட்டுமல்ல, அந்த ராஜாவுக்கு சாவே கிடையாது, என்று சொன்னார். அதனால்தான் ராஜா ஆகும் ஆசையில் நாங்கள் எங்களைத் தூக்கிலிடும்படி கேட்டோம்," என்றான் வீரசேணன்.


வீரசேணனின் நண்பன் வேகமாக," முனிவர் என்னிடம்தான் முதலில் சொன்னார். எனவே, என்னைத்தான் தூக்கிலிட நீங்கள் கட்டளையிட வேண்டும், என்றான்.


ராஜா கடகடவென சிரித்தான். இதைக் கேட்டபின்னும் உங்களைத் தூக்கிலிட நான் என்ன முட்டாளா? தளபதியே நாட்டிய ஆசிரியருக்குப் பதிலாக என்னைக் காலதாமதமின்றி தூக்கிலிடுங்கள்.

இது ராஜகட்டளை! உடனே நிறைவேறட்டும்..ம்ம்... என்றான் முட்டாள் ராஜா.


அப்புறம் என்ன? ராஜாவின் விருப்பப்படியே ராஜா தூக்கிலிடப்பட்டான். முட்டாள் ராஜாவை சமயோசிதமாக தூக்கிலிட வைத்த வீரசேணனை பொதுமக்கள் அந்த இடத்திலேயே ராஜாவாக்கினர்.


நாட்டிய ஆசிரியரும் அவரின் மனைவியும் வீரசேணனுக்கும் அவனது நண்பனுக்கும் நன்றி தெரிவித்தனர். முட்டாள் ராஜா முட்டாள்தனமாகவே ஒழிந்ததில் அந்தநாட்டு மக்கள் சந்தோஷமாகக் கொண்டாடினர்.

<<>>கதைப்பூங்கா....!<<>>

" முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..! "

மணி வகுப்பில், முதல் மாணவன். பாடத்தில் மட்டுமல்ல; பேச்சு, கட்டுரை, விளையாட்டுஎல்லாத்துலயும் முதல் மாணவன். பாராட்டும், பரிசுகளும் மணியைத் தேடி வந்தன.ரமணி வகுப்பில் படிக்கும் சக மாணவனான மதிவாணனுக்கு படிப்பதில் நாட்டமில்லாமல்விளையாட்டிலேயே பொழுதைப் போக்குவான். னாலும் ரமணி பரிசோ, பாராட்டோபெறும்போது மதிக்கு கொஞ்சம் பொறாமையா ருக்கும். அவனை எதிலாவதுவீழ்த்திக் காட்டிட சந்தர்ப்பம் வாய்க்காதா என்று காத்திருந்தான்.

அது நேர்வழியில்லாமல் குறுக்குவழியாக ருந்தது. பாடங்களில் ரமணியை விடஅதிக மார்க் வாங்க வேண்டும் என்று எண்ணாமல், ரமணிக்கு குறைவான மார்க்கிடைக்க என்ன செய்வது என்றுதான் சிந்திப்பான் மதி.

மதியோ வசதியான வீட்டுப் பையன். ரமணிக்கு அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். பல நேரங்களில் சாப்பிட காலையில் ஒன்றுமிருக்காது. எப்படியிருந்தாலும், எதையும் வெளிக்காட்டாமல் படிப்பில் மட்டுமே தன் முழுக் கவனத்தையும் செலுத்தினான்.

அன்று பள்ளிக்கு கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி நாள்! ரமணியின் அப்பா,யாரிடமாவது கைமாத்தா பணம் வாங்கீட்டு வர்றேன்னு போனவரைக் காணாமல்ரமணி தவித்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கு வேறு நேரம் கிக் கொண்டிருந்தது.

ஒருவழியா வந்து பணத்தைக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு ஓட்டமும்நடையுமாக பள்ளியை நோக்கி போய்க்கொண்டிருந்தான். திடீர்ணு பின்பக்கம்எதோ வந்து மோத ரமணி தலைகுப்புற வீழ்ந்தான். அவன் புத்தகப் பை ஒரு பக்கமும்வன் ஒரு பக்கமுமாக விழுந்து கிடக்க, " ஸாரிடா... என்றவாறு மதிவாணன் வந்து ரமணியைத் தூக்கிவிட்டான்.

மதி வேண்டுமென்றே சைக்கிளை அவன் மீது மோதிவிட்டு தெரியாமல் நடந்தது போல மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். ரமணிக்குத்தான் கை, கால், நெற்றியில் காயம் பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

சிதறிக்கிடந்த புத்தகங்களையும் நோட்டுக்களையும் எடுத்து பைக்குள் திணித்துக்கொண்டு பள்ளிக்கு நேரமாச்சே என்ற உணர்வு உந்தித் தள்ள ஓடினான். நல்லவேளையாக சிரியர் வகுப்பிற்கு வரும் முன் அவன் டத்தில் போய்அமர்ந்து விட்டான்.வகுப்பாசிரியர் வந்து வருகைப் பதிவேடு சரி பார்த்ததும் முதல் கேள்வியாக,என்ன ரமணி பணம் கொண்டு வந்தியா ? என்றுதான் கேட்டார். கொண்டுவந்திருக்கிறேன் அய்யா, என்று சொல்லிக்கொண்டே சட்டைப்பையில்கையை விட்டவன் தேள் கொட்டியது போல் துடித்துப் போனான்.

பையில்பணம் ல்லை. தேம்பித்தேம்பி அழ ரம்பித்துவிட்டான். சிரியர் அவனைசமாதானப்படுத்துவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. ரமணிக்காகசிரியரே கட்டணத்தையும் செலுத்திவிட்டார்.
விழுந்த டத்தில் பணம் பையிலிருந்து விழுந்திருக்குமோ என்று ரமணி நினைத்துஅங்கெல்லாம் போய் தேடிப் பார்த்தான்.


னால் மதிவாணன் மட்டும் தனக்குள்சிரித்துக்கொண்டிருந்தான்.ரமணி மாலையில் வீட்டில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில்அவன் அப்பாவும் வந்துவிட்டார். ரமணி காலையில் பணம் தொலைந்து போனதைச்சொல்லி அழுதான். அந்தப்பணம் அப்படி
போகணும்னு ருக்குறப்போ நீ என்னசெய்ய முடியும் என்று சொல்லி அவனைத் தேற்றினார். சரி, நீ முகத்தைக் கழுவீட்டு கடைக்குப் போய் துல எழுதியிருக்கிறதெல்லாம்வாங்கீட்டு வா என்று அவனை கடைக்கு அனுப்பினார்.

கடைவீதிக்கு வந்த ரமணி ஒரு டத்தில் கூட்டமாக மக்கள் கூடி நிற்பதையும்,து யார் பெத்த பிள்ளையோ, அப்டீன்னு யாரோ சொல்வதும் காதில் விழுந்தது.கூட்டத்தை விலக்கிப் போய் ரமணி பார்த்தான். அங்கே தலையில் அடிபட்டுரத்தம் வந்துகொண்டிருக்க மதிவாணன் மெல்ல முனங்கிக் கொண்டிருந்தான்.

" ஐயோ ! மதி நீயா? என்று கேட்டவன், அருகே நின்ற சைக்கிள் ரிக்ஷாக்காரரைகூப்பிட்டு, வன் என்னோட படிக்கிறவன். கொஞ்சம் உதவி பண்ணுங்க. ஸ்பத்திரிக்குகொண்டு போக... " என்றான்.

" அட நீவேற ! அடிச்சுத் தள்ளீட்டு நிக்காம எவனோ போயிட்டான்.
போலீஸ் கேஸைநான் தொடமாட்டேம்பா என்றான் ரிக்ஷாக்காரன்.

" ஐயா, சீக்கிரமா ஸ்பத்திரிக்கு கொண்டு போனா காப்பாத்தீரலாம். ஒங்களுக்குரிக்ஷா வாடகைய நானே கொடுத்துர்றேன் என்று சொல்ல அங்கிருந்தவர்கள் சிலர்ரமணிக்கு தரவாகப் பேச அருகிலிருந்த மருத்துவமனையில் கொண்டு போய்மதியைச் சேர்த்தான்.

தீவிர மருத்துவ சிகிச்சைப் பகுதியில் மருத்துவர்கள் சிகிச்சைஅளித்தனர்.

சிறிது நேரம் கழித்து வந்த மருத்துவர் ஒருவர், " தம்பி, சரியான சமயத்துல கொண்டுவந்து சேர்த்தாய். ன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்துல கண் முழிப்பான். நீ அதற்குள்ளஅவங்க வீட்டுக்குத் தகவல் சொல்லி வரச் சொல்லுன்னார்.

மதிவாணன் அப்பாவும், அம்மாவும் அரக்கப் பரக்க வந்தார்கள். அப்போதுதான் மதிகண்ணைத் திறந்து பார்த்தான். அவன் தலையிலிருந்த கட்டைப் பார்த்து அவனின்அம்மா, மதீன்னு கத்தி அழ ரம்பிச்சுட்டார். அங்கிருந்த மருத்துவரிடம் மதியின்அப்பா, எப்படியோ மகனை காப்பாத்தீட்டீங்க. ஒங்களுக்கு கோடி நன்றிங்க, அப்டீன்னார்.

" ங்க கொண்டுவந்து சரியான சமயத்துல சேர்த்த அந்தப் பையனுக்கு நன்றி சொல்லுங்கமுதல்ல அப்டீன்னு ரமணியை நோக்கி கையைக் காட்டினார், மருத்துவர்.

அப்போதுதான், மதி உட்பட எல்லோருக்கும் விஷயம் புரிந்தது. தம்பி, நீ மகராசனா ருக்கணும்ப்பா,என்று மதியின் அப்பாவும் அம்மாவும் ரமணிக்கு நன்றி சொன்னாங்க. ரமணி , என்னங்கமதிகூடப் படிக்கிறேன், தக்கூட நான் செய்யலையின்னா நான் படிச்சு என்ன புண்ணியம்என்றான்.

மதியின் கண்களிலிருந்து சரம்,சரமாய் கண்ணீர் வடிந்தது. ரமணியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நீ என்னை மன்னிச்சுரு என்றான் மதி. மன்னிப்பா? எதுக்கு நான் ஒன்னை மன்னிக்கணும்?என்றான் ரமணி.

" நான் எவ்வளவோ கெடுதல் ஒனக்குப் பண்ணீருக்கேன். ன்னைக்கு காலையில கூட உன்னைவேணும்னே சைக்கிள்ல மோதுனேன். உன் பையிலிருந்து கீழ விழுந்த பணத்தைக் கூட நாந்தான்எடுத்தேன்.

னா, நீ என்னை ப்ப சாவுல ருந்து காப்பாத்தீருக்க. என்னை மன்னிச்சு ஒன்னோடநண்பனா ஏத்துப்பியா? என்று கேட்டு மேலும் அழுதான் மதி.

" அட, பைத்தியம் ! நீ எப்பவும் என் நண்பன்தான் ! நீ எப்ப தப்புன்னு உணர்ந்திட்டியோ அப்பறம்என்ன? நீ ப்ப அழக் கூடாது. எங்க சிரி பாக்கலாம் என்றான், ரமணி.

மதிவாணனின் அப்பா, நாளைக்குக் காலையில் ரமணிக்கு ஒரு புது சைக்கிள் வாங்கிக் கொடுக்கப்போறேன், அப்டீன்னார்.

மதிவாணனின் அம்மா, எனக்கு ன்னையிலிருந்து ரெண்டு மகன்கள் என்று சொல்லி ரமணியைகட்டி அணைத்துக்கொண்டார்.

ரமணிக்கு அந்தத் தாயின் அரவணைப்பில்தன் தாயைக் காணும் சுகத்தில் மூழ்கிப் போனான்.

கதை தரும் நீதி : - யாருக்கும் தீங்கு விளைவிக்க மனதால் கூட எண்ணுதல் கூடாது. ஒருவருக்கு காலையில் தீங்கு செய்தால் மாலையில் அவருக்கே தீமை தேடிவரும் ! எனவே நமக்குத் தீங்கு செய்பவர்களுக்குக்கூட நாம் தீங்கு செய்யலாகாது !

<<>>உணவு மழைத் தீவு! -1.<<>>(சிறுவர் தொடர் கதை )




கோடை விடுமுறை. விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்க அகிலா, நிகிலா இவர்கள் தம்பி ரவி மூவரும் கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டுக்கு வந்திருந்தனர். தோட்டத்தில் புங்க மரத்தில் ஊஞ்சல் கட்டிக் கொடுத்திருந்தார், தாத்தா. மூவருக்கும் அதில் போட்டி போட்டுக் கொண்டு ஆடுவதில் சந்தோஷம்.
தோட்டத்தின் வடக்குப் பகுதியில் கோழிப் பண்ணை; அதற்கு
கொஞ்சம் தள்ளி சிறு மரவீடு. அது புறாக்களுக்குரிய வசிப்பிடம்.


அகிலா பாட்டிக்கு ஒத்தாசையாக இருப்பாள். தாத்தாவோடு கோழிப்பண்ணையில் முட்டைகளைச் சேகரிக்க நிகிலாவுக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம். ரவிக்கு புறாக்களை வேடிக்கை பார்ப்பது, எந்தப்புறா முட்டையிட்டிருக்கிறது? எந்தப் புறாக் குஞ்சு கண் விழித்துப் பார்க்கிறது? என்பதை ஒலி எழுப்பாமல் கவனிப்பான்.


எப்படியோ மூவருக்கும் நகரத்தின் இரைச்சல்கள் இல்லாமல் விடுமுறை அமைதியாகவும் இனிமையாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அன்று ஞாயிற்றுக்கிழமை. பாட்டி கோழிக் குருமா வைத்துக் கொண்டிருந்தார். தாத்தா தோசைக்கல்லில் தோசை வார்த்துக் கொண்டிருந்தார். நிகிலாவும் ரவியும் உணவு மேஜை முன்பாக

பசியோடு உட்கார்ந்திருந்தனர்.
கோழிக்குருமா வாசம் வேறு பசியை அவர்களுக்கு அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. " தாத்தா, சீக்கிரம் தாத்தா. வயித்தைப் பசிக்குது, சீக்கிரம் தோசையைக் கொண்டாங்க " என்று ரவி நிமிடத்துக்கு ஒரு குரல் கொடுத்துக்கொண்டிருந்தான். " இதோ ஆச்சு...ஆச்சு " என்று தாத்தா


சொல்லி முடிக்கவும் ரவி, "ஆ" என்று அலறவும் எல்லோரும் ரவியை நோக்கித் தங்கள் பார்வையை வீசினர்.


சந்திர மண்டலத்தில் விண்கலம் ஒன்று இறங்கியது போல ரவியின் தலையில் சற்று முகத்தை மறைத்தவாறு அது!
அதனால்தான் ரவி அலறியிருக்கிறான். நிகிலாவும் அகிலாவும்
அதைப் பார்த்து சிரியோ சிரி என்று சிரித்துக்கொண்டிருந்தனர்.


அவர்கள் அப்படிச் சிரிக்கக் காரணம்? இதுதான்!.
தாத்தா சற்று கரண்டியில் வேகத்தைக் காட்ட
"விர்"ரென்று பறந்து வந்த தோசைதான் அது!?


"போதும் நீங்க தோசை சுட்டு புள்ளைக்குச் சூடு போட்டது.
நகருங்க என்று பாட்டி, தாத்தாவை இடத்தைக் காலிபண்ண வைத்தார்.


கொஞ்ச நேரத்தில் பாட்டி சுடச்சுட சுட்டுப்போட்ட தோசைகள் கோழிக் குருமாவோடு எல்லோர் வயிற்றிலும் அடக்கமானது.


நிகிலா, ரவியைக் கேலி பண்ணிக்கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் ரவியோட நெற்றி பனியாரம் மாதிரி வீங்கப்போகுது.
ரெண்டு நாளைக்கு எங்கும் வெளியே போக முடியாது, பாரேன்" என்றாள்.
தாத்தாவிடம் ரவி, நிகிலாவைப் புகார் செய்து கொண்டிருந்தான்.


" ரவி, நிகிலா சொன்னா சொல்லீட்டுப் போகட்டும். சொல்றவங்களுக்குத் தானே வாய் வலிக்கும். நீ, ஏன் கவலைப்படணும். இரு, நான் இப்ப மருந்து போடுறேன். சரியாப்போகும், " என்றார் தாத்தா.


"இராத்திரி தாத்தா உனக்கு ஒரு அற்புதமான கதை சொல்லப் போறேன்.


இந்த மாதிரி கதையை முன்னாடி நீ கேட்டிருக்க முடியாது. நிகிலாவுக்கு இந்தக் கதை கிடையாது," என்று சொல்லி ரவியை தாத்தா சமாதானப்படுத்தினார்.


" அய்! தாத்தா எனக்கு மட்டும் கதை சொல்லப் போறாங்களே " என்று சந்தோஷமாக நிகிலாவிடம் சொல்லி அழகு காட்டினான்.


" தாத்தா என்ன உன் காதுல இரகசியமாவா கதை சொல்லப்போறாங்க. கதை சொல்லும்போது எனக்கும் கேக்கத்தானே செய்யும்," என்றாள் நிகிலா பதிலுக்கு.


"நீங்கள்ளாம் தூங்கினதுக்கு அப்புறமா தாத்தா வந்து எனக்கு மட்டும் சொல்லுவாங்களே " என்று ரவி சொல்ல நிகிலா தாத்தாவிடம் சண்டை போட ஆரம்பித்தாள்.


" தாத்தா, எனக்கும் அகிலாவுக்கும் சேர்த்துத்தான் கதை சொல்லணும்.
அது என்ன நீங்க ரவிக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்றேன்னு சொல்லீருக்கீங்க? என்று கேட்கரவி, சொல்லக்கூடாது என்று சொல்ல ஒரே அமர்க்களாமாயிருந்தது.
" சரி... சரி எல்லோருக்கும் சேர்த்தே கதை சொல்றேன்," என்று சொன்ன பிறகுதான் சத்தம் ஓய்ந்தது அங்கு.
என்னடா, இது திடீர்னு, இந்தத் தாத்தா சரண்டர் ஆயிட்டாரே என்று
ரவிக்கு உள்ளுக்குள் வருத்தமாகத்தானிருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், " தாத்தா நீங்க சொல்லப் போற கதைப் பெயரை மட்டும் எனக்குச் சொல்லுங்க தாத்தா ப்ளீஸ்," என்றான். தாத்தாவும் ரவியின் காதுல ரகசியமாச் சொன்னார். சொல்லீட்டு கோழிப் பண்ணைக்குப் புறப்பட்டுப் போனார்.
தாத்தா போனப்புறம், " அட! கதையோட பேரே ரெம்ப நல்லாருக்கே! " என்று ரவி துள்ளிக் குதித்தான்.
" ரெம்பத்தான் அலட்டாதே. அதான் இராத்திரி தாத்தா சொல்லப்போறாங்களே. அப்பத் தெரிஞ்சிட்டுப் போகுது என்ன கதைன்னு? என்று நிகிலா சொன்னாள்.
என்ன இருந்தாலும் இந்த ரவிப்பயகிட்ட மட்டும் தாத்தா சொல்லீட்டுப் போயிட்டாங்களேன்னு நிகிலாவுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். உடனே வீட்டைவிட்டு நிகிலா வெளியே போனாள். போன வேகத்தில் நிகிலா வந்து, " எங்கிட்டயும் தாத்தா கதைப் பேரைச் சொல்லீட்டாங்களே! " என்று சந்தோஷமாகச் சொன்னாள். அதைக் கேட்டதும் ரவியின் முகம் வாடிவிட்டது.


"உணவு மழைத் தீவு ன்னு சொல்லீட்டாங்களா தாத்தா?" என்றான் ரவி.
" அய்! தாத்தா சொல்லல. நீயே சொல்லீட்டீயே," என்று நிகிலா கைதட்டிச் சிரித்தாள்.
இரவுச் சாப்பாடு முடிந்து எல்லோரும் கூடத்தில் தாத்தாவை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் தாத்தாவும் அங்கே வந்து சேர்ந்தார். " என்ன, எல்லோரும் கதை கேட்க ரெடியா? " தாத்தா கேட்டார். மூவரும் நாங்க ரெடி என்றனர். எல்லோரின் கண்களும் தாத்தாவின் மேல் பதிந்திருந்தன. தொண்டையைச் செருமி, சரி செய்துகொண்டு கதையை ஆரம்பித்தார்.

- இன்னும் பொழியும்....!

Labels: , , , , ,

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது